Spread the love

வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங் கனைவரையும் ஆராய்வ தொற்று

Spread the love
Sectionபொருட்பால் / VERSES ON ARTHA [MATERIAL WEALTH]
Chapterஅரசியல் / POLITICS

வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங்
கனைவரையும் ஆராய்வ தொற்று

Transliteration

Vinai Cheyvaar Thanjchuurr Rraang Kanaivaraiyum Aaraayvathorr Rru

G U Pope Translation

His officers, his friends, his enemies, All these who watch are trusty spies.

Varadarajan Explanation

தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்றுக்கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்.

Solomon Pappiah Explanation

அரசுப் பணியாளர், ஆளும் கட்சி, அதன் எதிர்கட்சியினர், அயலவர் என்று அனைவரின் சொல், செயல் கொண்டு அவர்தம் மனக்கருத்தை அறிபவரே ஒற்றர்.

Karunanidhi Explanation

ஓர் அரசில் உளவறியும் ஒற்றர் வேலை பார்ப்பவர்கள், வேண்டியவர், வேண்டாதவர், சுற்றத்தார் என்றெல்லாம் பாகுபாடு கருதாமல் பணிபுரிந்தால்தான் அவர்களை நேர்மையான ஒற்றர்கள் எனக் கூற முடியும்

Ellis Explanation

He is a spy who watches all men, to wit, those who are in the king’s employment, his relatives, and his enemies.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles