Section | அறத்துப்பால் / Righteousness |
Chapter | இல்லறவியல் / GRHASTHA DHARMA |
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்
Transliteration
Vendarka Ve ஃ Kiyaam Aakkam Vilaivaiyin Maandarkaridaam Payan
G U Pope Translation
Seek not increase by greed of gain acquired; That fruit matured yields never good desired.
Varadarajan Explanation
பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும். அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.
Solomon Pappiah Explanation
பிறர் பொருளை அவர் விரும்பாதிருக்க, நாம் விரும்பிப் பெற்று அனுபவிக்கும்போது அதன் பயன் நல்லதாக இல்லை என்று அறிவதால், பிறர் பொருளைக் கவர்வதற்கு விரும்ப வேண்டா.
Karunanidhi Explanation
பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது
Ellis Explanation
Desire not the gain of covetousness. In the enjoyment of its fruits there is no glory.