Section | பொருட்பால் / VERSES ON ARTHA [MATERIAL WEALTH] |
Chapter | நட்பியல் / SECTION ON FRIENDSHIP |
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை
Transliteration
Valiyaarkku Maarre Rr Rral Ombuga Ombaa Meliyaarmel Mega Pagai
G U Pope Translation
With stronger than thyself, turn from the strife away; With weaker shun not, rather court the fray.
Varadarajan Explanation
தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட மெலியவர் மேல் பகைக் கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.
Solomon Pappiah Explanation
பகைவர் நம்மிலும் வலியர் என்றால் அவரை எதிர்ப்தைத் தவிர்த்து விடுக. மெலியர் என்றால் உடனே எதிர்த்துச் செல்க.
Karunanidhi Explanation
மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே பகைமாட்சி எனப் போற்றப்படும்
Ellis Explanation
Avoid offering resistance to the strong; (but) never fail to cherish enmity towards the weak.