Section | அறத்துப்பால் / Righteousness |
Chapter | இல்லறவியல் / GRHASTHA DHARMA |
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
Transliteration
Vaiyatthul Vaazvaangu Vaazpavan Vaan Uraiyum Thaivatthul Vaikkappadum
G U Pope Translation
Who shares domestic life, by household virtues graced,
Shall, mid the Gods, in heaven who dwell, be placed.
Varadarajan Explanation
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்
Solomon Pappiah Explanation
மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.
Karunanidhi Explanation
தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்
Ellis Explanation
He who on earth has lived in the conjugal state as he should live, will be placed among the Gods whodwell in heaven.