Section | அறத்துப்பால் / Righteousness |
Chapter | பாயிரவியல் / PREFACE |
வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று
Transliteration
Vaaninrulagam Vazangi Varutalaal Taanamizdam Enrunarar Paarru
G U Pope Translation
The world its course maintains through life that rain unfailing gives;
Thus rain is known the true ambrosial food of all that lives.
Varadarajan Explanation
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்
Solomon Pappiah Explanation
உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது. அதனால் மழையே அமிழ்தம் எனலாம்
Karunanidhi Explanation
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது
Ellis Explanation
By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia.