Section | பொருட்பால் / VERSES ON ARTHA [MATERIAL WEALTH] |
Chapter | நட்பியல் / SECTION ON FRIENDSHIP |
வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு
Transliteration
Vaalpol Pagaivarai Anjcharrka Anjchuga Kelpol Pagaiavar Thodarpu
G U Pope Translation
Dread not the foes that as drawn swords appear; Friendship of foes, who seem like kinsmen, fear!
Varadarajan Explanation
வாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை, ஆனால் உறவினரைப் போல் இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.
Solomon Pappiah Explanation
வாளைப்போல் வெளிப்படையாகத் தெரியும் பகைவர்க்கு அஞ்ச வேண்டா. நண்பரைப்போல் வெளியில் காட்டி மனத்துள் பகைவராகவே இருப்போரின் தொடர்புக்கு அஞ்சுக.
Karunanidhi Explanation
வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடிக் கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
Ellis Explanation
Fear not foes (who say they would cut) like a sword; (but) fear the friendship of foes (who seemingly act) like relations.