Section | பொருட்பால் / VERSES ON ARTHA [MATERIAL WEALTH] |
Chapter | நட்பியல் / SECTION ON FRIENDSHIP |
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்
Transliteration
Utkappadaa Ar Oliyizhappar Enjchaanrrum Katkaathal Kondozhagu Vaar
G U Pope Translation
Who love the palm’s intoxicating juice, each day, No rev’rence they command, their glory fades away.
Varadarajan Explanation
கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார்.
Solomon Pappiah Explanation
போதைப் பொருள் மீத எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார். வாழும் காலத்து மரியாதையும் இழந்த போவார்கள்.
Karunanidhi Explanation
மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல. மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்
Ellis Explanation
Those who always thirst after drink will neither inspire fear (in others) nor retain the light (of their fame).