Section | பொருட்பால் / VERSES ON ARTHA [MATERIAL WEALTH] |
Chapter | நட்பியல் / SECTION ON FRIENDSHIP |
உள்ளற்க உள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு
Transliteration
Ullarrka Ullanjch Chirruguva Kollarrka Allarrkan Aarr Rra Rruppaar Natpu
G U Pope Translation
Think not the thoughts that dwarf the soul; nor take For friends the men who friends in time of grief forsake.
Varadarajan Explanation
ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க வேண்டும், அதுபோல் துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.
Solomon Pappiah Explanation
உற்சாகம் குறைவதற்கான செயல்களை எண்ண வேண்டா. நம் துன்பக் காலத்தில் நம்மைக் கைவிட்டு விடுபவரின் நட்பைக் கொள்ள வேண்டா.
Karunanidhi Explanation
ஊக்கத்தைச் சிதைக்கக்கூடிய செயல்களையும், துன்பம் வரும்போது விலகிவிடக்கூடிய நண்பர்களையும் நினைத்துப் பார்ககாமலே இருந்து விட வேண்டும்
Ellis Explanation
Do not think of things that discourage your mind, nor contract friendship with those who would forsake you in adversity.