Section | பொருட்பால் / VERSES ON ARTHA [MATERIAL WEALTH] |
Chapter | அரசியல் / POLITICS |
உள்ள முடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்
Transliteration
Ulla Mudaimai Udaimai Poruludaimai Nillathu Neengi Vidum
G U Pope Translation
The wealth of mind man owns a real worth imparts, Material wealth man owns endures not, utterly departs.
Varadarajan Explanation
ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும், மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும்.
Solomon Pappiah Explanation
மன ஊறுதியே நிலையான உடைமை. செல்வம் உடைமையோ நிலைத்திராமல் நீங்கிவிடும்.
Karunanidhi Explanation
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது
Ellis Explanation
The possession of (energy of) mind is true property; the possession of wealth passes away and abides not.