Section | பொருட்பால் / VERSES ON ARTHA [MATERIAL WEALTH] |
Chapter | நட்பியல் / SECTION ON FRIENDSHIP |
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்
Transliteration
Thunjchinaar Chetthaarin Verrallar Enjchaanrrum Nanjchunpaar Kallun Pavar
G U Pope Translation
Sleepers are as the dead, no otherwise they seem; Who drink intoxicating draughts, they poison quaff, we deem.
Varadarajan Explanation
உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவுமயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்.
Solomon Pappiah Explanation
உறங்குபவர், இறந்துபோனவரிலும் வேறுபட்டவர் அல்லர். அதுபோலவே, எப்போதும் போதைப் பொருளைப் பயன்படுத்துபவர் நஞ்சு உண்பவரிலும் வேறுபட்டவர் அல்லர்.
Karunanidhi Explanation
மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்
Ellis Explanation
They that sleep resemble the deed; (likewise) they that drink are no other than poison-eaters.