Section | பொருட்பால் / VERSES ON ARTHA [MATERIAL WEALTH] |
Chapter | அமைச்சியல் / QUALITIES TO BE MAINTAINED BY A MINISTER |
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை
Transliteration
Thoonguga Thoongichcheyarrpaala Thoongarrka Thoongaathu Cheyyum Vinai
G U Pope Translation
Slumber when sleepy work’s in hand: beware Thou slumber not when action calls for sleepless care!
Varadarajan Explanation
காலந்தாழ்த்தி செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்ந்தே செய்ய வேண்டும், காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்யவேண்டிய செயல்களைச் செய்ய காலந்தாழ்த்தக் கூடாது.
Solomon Pappiah Explanation
காலந்தாழ்த்திச் செய்யவேண்டிய செயல்கள் என்றால் காலந்தாழ்த்துக. காலம் தாழத்தாது செய்ய வேண்டிய செயல்கள் என்றால் காலம் தாழ்த்த வேண்டா.
Karunanidhi Explanation
நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத் தாமதித்துச் செய்யலாம். ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது
Ellis Explanation
Sleep over such (actions) as may be slept over; (but) never over such as may not be slept over.