Section | அறத்துப்பால் / Righteousness |
Chapter | இல்லறவியல் / GRHASTHA DHARMA |
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு
Transliteration
Thiiyinaar Suttapun Ullarum Aaraade Naavinaar Sutta Vadu
G U Pope Translation
In flesh by fire inflamed, nature may thoroughly heal the sore; In soul by tongue inflamed, the ulcer healeth never more
Varadarajan Explanation
தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும். ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.
Solomon Pappiah Explanation
ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது.
Karunanidhi Explanation
நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும். ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது
Ellis Explanation
The wound which has been burnt in by fire may heal, but a wound burnt in by the tongue will never heal.