Section | பொருட்பால் / VERSES ON ARTHA [MATERIAL WEALTH] |
Chapter | அரசியல் / POLITICS |
தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்
Transliteration
Therrarrka Yaaraiyun Theraathu Thernthapin Therruga Therrum Porul
G U Pope Translation
Trust no man whom you have not fully tried, When tested, in his prudence proved confide.
Varadarajan Explanation
யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.
Solomon Pappiah Explanation
எவரையும் ஆராயாமல் பதவியில் அமர்த்த வேண்டா. ஆராய்ந்த பிறகு தேர்ந்தவற்றின்மேல் சந்தேகம் கொள்ளவும் வேண்டா.
Karunanidhi Explanation
நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும் ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பிவிடக் கூடாது
Ellis Explanation
Let (a king) choose no one without previous consideration; after he has made his choice, let him unhesitatingly select for each such duties as are appropriate.