Section | பொருட்பால் / VERSES ON ARTHA [MATERIAL WEALTH] |
Chapter | நட்பியல் / SECTION ON FRIENDSHIP |
தன்றுணை இன்றால் பகையிரண்டால் தானொருவன்
இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று
Transliteration
Thanrrunai Inrraal Pagaiyirandaal Thaanoruvan Inrrunaiyaak Kolgavarrin Onrru
G U Pope Translation
Without ally, who fights with twofold enemy o’ermatched, Must render one of these a friend attached.
Varadarajan Explanation
தனக்கு உதவியான துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக் கொள்ள வேண்டும்.
Solomon Pappiah Explanation
தமக்கோ உதவும் நண்பர் இல்லை. தம்மைப் பகைப்பவரோ இருவர். அப்போது தனியாக இருக்கும் ஆட்சியாளர், தம்மைப் பகைக்கும் இருவருள் ஒருவனை இனிய நட்பாக மாற்றிக் கொள்க.
Karunanidhi Explanation
தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்
Ellis Explanation
He who is alone and helpless while his foes are two should secure one of them as an agreeable help (to himself).