Section | அறத்துப்பால் / Righteousness |
Chapter | இல்லறவியல் / GRHASTHA DHARMA |
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்
Transliteration
Solluga Sollirpayanudaiya Sollarka Sollirpayanilaaschol
G U Pope Translation
If speak you will, speak words that fruit afford, If speak you will, speak never fruitless word.
Varadarajan Explanation
சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.
Solomon Pappiah Explanation
சொற்களில் அறம், பொருள், இன்பம் ஆகிய பயன்தரும் சொற்களையே சொல்லுக. பயனற்ற சொற்களைச் சொல்லவேண்டா.
Karunanidhi Explanation
பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்
Ellis Explanation
Speak what is useful, and speak not useless words.