Section | பொருட்பால் / VERSES ON ARTHA [MATERIAL WEALTH] |
Chapter | அரணியல் / SECTION OF DEFENSE |
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்
கிறையொருங்கு நேர்வது நாடு
Transliteration
Porraiyorungu Melvarunkaal Thaaangi Irraivarr Kirraiyorungu Nervathu Naadu
G U Pope Translation
When burthens press, it bears; Yet, With unfailing hand To king due tribute pays: that is the ‘land’
Varadarajan Explanation
(மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால்) சுமை ஒரு சேரத் தன் மேல் வரும் போது தாங்கி, அரசனுக்கு இறைபொருள் முழுதும் தர வல்லது நாடாகும்.
Solomon Pappiah Explanation
போர், இயற்கை அழிவு ஆகியவற்றால் மக்கள் பிற நாடுகளில் இருந்து வந்தால் அந்த பாரத்தையும் தாங்கும். தன் அரசிற்குத் தான் தரவேண்டிய வரியையும் மகிழ்வோடு தரும். இதுவே நாடு.
Karunanidhi Explanation
புதிய சுமைகள் ஒன்றுணிரண்டு வரும் போதும் அவற்றைத் தாங்கிக் கொண்டு, அரசுக்குரிய வரி வகைகளைச் செலுத்துமளவுக்கு வளம் படைத்ததே சிறந்த நாடாகும்
Ellis Explanation
A kingdom is that which can bear any burden that may be pressed on it (from adjoining kingdoms) and (yet) pay the full tribute to its sovereign.