Section | அறத்துப்பால் / Righteousness |
Chapter | இல்லறவியல் / GRHASTHA DHARMA |
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனென்றோ ஆன்ற வொழுக்கு
Transliteration
Piranmanai Nokkaada Peraanmai Saanrorku Aranonro Aanra Vozhakku
G U Pope Translation
Manly excellence, that looks not on another’s wife, Is not virtue merely, ’tis full ‘propriety’ of life.
Varadarajan Explanation
பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று. நிறைந்த ஒழுக்கமுமாகும்.
Solomon Pappiah Explanation
அடுத்தவன் மனைவியை மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று. சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும்
Karunanidhi Explanation
வெறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுமன்று. அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்
Ellis Explanation
That noble manliness which looks not at the wife of another is the virtue and dignity of the great.