Section | அறத்துப்பால் / Righteousness |
Chapter | இல்லறவியல் / GRHASTHA DHARMA |
பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்
Transliteration
Payanilsol Paaraattu Vaanai Magan Enal Maakat Padhadiyenal
G U Pope Translation
Who makes display of idle words’ inanity, Call him not man, -chaff of humanity!
Varadarajan Explanation
பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.
Solomon Pappiah Explanation
பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா. மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள்.
Karunanidhi Explanation
பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்
Ellis Explanation
Call not him a man who parades forth his empty words. Call him the chaff of men.