Section | அறத்துப்பால் / Righteousness |
Chapter | இல்லறவியல் / GRHASTHA DHARMA |
ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து
Transliteration
Orutthaarai Onraaga Vaiyaare Vaippar Porutthaarai Ponpor Podindu
G U Pope Translation
Who wreak their wrath as worthless are despised; Who patiently forbear as gold are prized.
Varadarajan Explanation
( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார். ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.
Solomon Pappiah Explanation
தனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார். பொறுத்துக் கொண்டவரையோ பொன்னாகக் கருதி மதிப்பர்.
Karunanidhi Explanation
தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள் பொறுத்துக் கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்
Ellis Explanation
(The wise) will not at all esteem the resentful. They will esteem the patient just as the gold which they lay up with care.