Section | பொருட்பால் / VERSES ON ARTHA [MATERIAL WEALTH] |
Chapter | நட்பியல் / SECTION ON FRIENDSHIP |
நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து
Transliteration
Novarrka Nontha Tharriyaarkku Mevarrka Menami Pagaivar Agatthu
G U Pope Translation
To those who know them not, complain not of your woes; Nor to your foeman’s eyes infirmities disclose.
Varadarajan Explanation
துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது, பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக் கூடாது.
Solomon Pappiah Explanation
நம் பலம் இன்மையை, தாமாக அறியாத நண்பர்களிடம் சொல்ல வேண்டா. பகைவர்களிடமோ அதைக் காட்டிக் கொள்ளவோ வேண்டா.
Karunanidhi Explanation
தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது
Ellis Explanation
Relate not your suffering even to friends who are ignorant of it, nor refer to your weakness in the presence of your foes.