Spread the love

நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க் கினத்தியல்ப தாகும் அறிவு

Spread the love
Sectionபொருட்பால் / VERSES ON ARTHA [MATERIAL WEALTH]
Chapterஅரசியல் / POLITICS

நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
கினத்தியல்ப தாகும் அறிவு

Transliteration

Nilatthiyalpaan Neerthirin Tharraagum Maanthark Kinatthiyalpathaagum Arrivu

G U Pope Translation

The waters’ virtues change with soil through which they flow; As man’s companionship so will his wisdom show.

Varadarajan Explanation

சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.

Solomon Pappiah Explanation

தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடும். மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.

Karunanidhi Explanation

சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்

Ellis Explanation

As water changes (its nature), from the nature of the soil (in which it flows), so will the character of men resemble that of their associates.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles