Section | பொருட்பால் / VERSES ON ARTHA [MATERIAL WEALTH] |
Chapter | நட்பியல் / SECTION ON FRIENDSHIP |
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங் கொழுகு பவர்
Transliteration
Nattaar Kurraimudiyaar Nanrra Rr Rraar Nannuthalaal Pettang Kozhagu Pavar
G U Pope Translation
Who to the will of her with beauteous brow their lives conform, Aid not their friends in need, nor acts of charity perform.
Varadarajan Explanation
மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தமது நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்க மாட்டார், அறத்தையும் செய்ய மாட்டார்.
Solomon Pappiah Explanation
தம் மனைவி விரும்பியபடியே வாழ்பவர், தம் நண்பர்க்கு ஏற்பட்ட குறையைப் போக்கமாட்டார் நல்லதும் செய்யமாட்டார்.
Karunanidhi Explanation
ஒரு பெண்ணின் அழகுக்காகவே அவளிடம் மயங்கி அறிவிழந்து நடப்பவர்கள், நண்பர்களைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள். நற்பணிகளையும் ஆற்றிட மாட்டார்கள்
Ellis Explanation
Those who yield to the wishes of their wives will neither relieve the wants of (their) friends nor perform virtuous deeds.