Section | அறத்துப்பால் / Righteousness |
Chapter | இல்லறவியல் / GRHASTHA DHARMA |
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்
Transliteration
Nanrikku Vitthaagum Nallozhakkam Theeyozhakkam Enrum Idumbait Tarum
G U Pope Translation
Decorum true’ observed a seed of good will be; ‘Decorum’s breach’ will sorrow yield eternally
Varadarajan Explanation
நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும். தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.
Solomon Pappiah Explanation
நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும். தீயொழுக்கமோ துன்பமே தரும்.
Karunanidhi Explanation
நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும் தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்
Ellis Explanation
Propriety of conduct is the seed of virtue; impropriety will ever cause sorrow.