Section | அறத்துப்பால் / Righteousness |
Chapter | இல்லறவியல் / GRHASTHA DHARMA |
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
Transliteration
Nanri Marappadu Nanranru Nanralladu Anre Marappadu Nanru
G U Pope Translation
Tis never good to let the thought of good things done thee pass away; Of things not good, ’tis good to rid thy memory that very day.
Varadarajan Explanation
ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று. அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம்.
Solomon Pappiah Explanation
ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று. அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்
Karunanidhi Explanation
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல. அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது
Ellis Explanation
It is not good to forget a benefit; it is good to forget an injury even in the very moment (in which it is inflicted).