Section | பொருட்பால் / VERSES ON ARTHA [MATERIAL WEALTH] |
Chapter | நட்பியல் / SECTION ON FRIENDSHIP |
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு
Transliteration
Nagutharr Poruttanrru Nattal Miguthikkan Merrchen Rridittarr Poruttu
G U Pope Translation
Nor for laughter only friendship all the pleasant day, But for strokes of sharp reproving, when from right you stray.
Varadarajan Explanation
நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பர் நெறிக்கடந்து செல்லும் போது முற்ப்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.
Solomon Pappiah Explanation
ஒருவனோடு நட்புக் கொள்வது சிரித்து மகிழ மட்டும் அன்று. நண்பனிடம் வேண்டாத செயல் இருக்கக் கண்டபோது விரைந்து கண்டித்துப் புத்தி சொல்வதற்கும் ஆம்.
Karunanidhi Explanation
நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல. நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும்
Ellis Explanation
Friendship is to be practised not for the purpose of laughing but for that of being beforehand in giving one another sharp rebukes in case of transgression.