Section | அறத்துப்பால் / Righteousness |
Chapter | இல்லறவியல் / GRHASTHA DHARMA |
நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்
Transliteration
Naduvinri Nanporul Ve ஃ Kin Kudiponrik Kurramum Aange Tharum
G U Pope Translation
With soul unjust to covet others’ well-earned store, Brings ruin to the home, to evil opes the door.
Varadarajan Explanation
நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.
Solomon Pappiah Explanation
பிறர்க்குரிய பொருளை அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும். குற்றங்கள் பெருகும்.
Karunanidhi Explanation
மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும்
Ellis Explanation
If a man departing from equity covet the property (of others), at that very time will his family be destroyed and guilt be incurred.