Section | பொருட்பால் / VERSES ON ARTHA [MATERIAL WEALTH] |
Chapter | அரணியல் / SECTION OF DEFENSE |
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு
Transliteration
Naadenba Naadaa Valatthana Naadalla Naada Valantharu Naadu
G U Pope Translation
That is a land that yields increase unsought, That is no land whose gifts with toil are bought.
Varadarajan Explanation
முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.
Solomon Pappiah Explanation
தன் மக்கள் சிரமப்படாமல் இருக்க அதிக உற்பத்தியைத் தருவதே நாடு என்று நூலோர் கூறுவர். தேடிவருந்திப் பெறும் நிலையில் இருப்பது நாடு அன்று.
Karunanidhi Explanation
இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளைவிட, இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும்
Ellis Explanation
The learned say that those are kingdom whose wealth is not laboured for, and those not, whose wealth is only obtained through labour.