Section | பொருட்பால் / VERSES ON ARTHA [MATERIAL WEALTH] |
Chapter | நட்பியல் / SECTION ON FRIENDSHIP |
மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்தும
ஒருவுக ஒப்பிலார் நட்பு
Transliteration
Maruvuga Maasarr Rraar Kenmaiyon Rreetthuma Oruvuga Oppilaar Natpu
G U Pope Translation
Cling to the friendship of the spotless one’s; whate’er you pay. Renounce alliance with the men of evil way.
Varadarajan Explanation
குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும், ஒத்தபண்பை இல்லாதவறுடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும்.
Solomon Pappiah Explanation
குற்றம் அற்றவரோடு நட்புக் கொள்க. உலகோடு ஒத்து வராதவரின் நட்பை விலை கொடுத்தாவது விட்டு விடுக.
Karunanidhi Explanation
மனத்தில் மாசு இல்லாதவர்களையே நண்பர்களாகப் பெற வேண்டும் மாசு உள்ளவர்களின் நட்பை, விலை கொடுத்தாவது விலக்கிட வேண்டும்
Ellis Explanation
Continue to enjoy the friendship of the pure; (but) renounce even with a gift, the friendship of those who do not agree (with the world).