Section | அறத்துப்பால் / Righteousness |
Chapter | இல்லறவியல் / GRHASTHA DHARMA |
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு
Transliteration
Maravarka Maasarraar Kenmai Thuravarka Thunbattul Thuppaayaar Natpu
G U Pope Translation
Kindness of men of stainless soul remember evermore! Forsake thou never friends who were thy stay in sorrow sore!
Varadarajan Explanation
குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது .
Solomon Pappiah Explanation
உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே. அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.
Karunanidhi Explanation
மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது. துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது
Ellis Explanation
Forsake not the friendship of those who have been your staff in adversity. Forget not be benevolence of the blameless.