Section | அறத்துப்பால் / Righteousness |
Chapter | இல்லறவியல் / GRHASTHA DHARMA |
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு
Transliteration
Mangalam Enba Manaimaatsi Marradan Nankalam Nanmakkatperu
G U Pope Translation
The house’s ‘blessing’, men pronounce the house-wife excellent; The gain of blessed children is its goodly ornament.
Varadarajan Explanation
மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.
Solomon Pappiah Explanation
ஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே.
Karunanidhi Explanation
குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு. அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது
Ellis Explanation
The excellence of a wife is the good of her husband; and good children are the jewels of that goodness.