Section | பொருட்பால் / VERSES ON ARTHA [MATERIAL WEALTH] |
Chapter | நட்பியல் / SECTION ON FRIENDSHIP |
மையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன்
கையொன் றுடைமை பெறின்
Transliteration
Maiyal Oruvan Kalittharr Rraa Rr Pethaithan Kaiyon Rrudaimai Perrin
G U Pope Translation
When folly’s hand grasps wealth’s increase, ’twill be As when a mad man raves in drunken glee.
Varadarajan Explanation
பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்து பிடித்த ஒருவன் கள்குடித்து மயங்கினார் போன்றதாகும்.
Solomon Pappiah Explanation
அறிவற்றவன் தன்னிடம் ஒன்றைச் சொந்தமாகப் பெறுவது, முன்பே பிடித்துப் பிடித்தவன், கள்ளால் மயங்கியும் நிற்பது போல் ஆகும்.
Karunanidhi Explanation
நல்லது கெட்டது தெரியாதவன் பேதை. அந்தப் பேதையின் கையில் ஒரு பொருளும் கிடைத்துவிட்டால் பித்துப் பிடித்தவர்கள் கள்ளையும் குடித்துவிட்ட கதையாக ஆகிவிடும்
Ellis Explanation
A fool happening to possess something is like the intoxication of one who is (already) giddy.