Section | அறத்துப்பால் / Righteousness |
Chapter | பாயிரவியல் / PREFACE |
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
Transliteration
Keduppadooum Kettarkkussaarvaaymar Raange Eduppadooum Ellam Mazai
G U Pope Translation
Tis rain works all: it ruin spreads, then timely aid supplies; As, in the happy days before, it bids the ruined rise.
Varadarajan Explanation
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை. மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்
Solomon Pappiah Explanation
பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும். பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்
Karunanidhi Explanation
பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்
Ellis Explanation
Rain by its absence ruins men; and by its existence restores them to fortune.