Section | அறத்துப்பால் / Righteousness |
Chapter | இல்லறவியல் / GRHASTHA DHARMA |
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி
Transliteration
Kedum Perukamum Illalla Nenjchattuk Kodaamai Saanrorkkani
G U Pope Translation
The gain and loss in life are not mere accident; Just mind inflexible is sages’ ornament.
Varadarajan Explanation
கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல. ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.
Solomon Pappiah Explanation
தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன. இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும்.
Karunanidhi Explanation
ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை. அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்
Ellis Explanation
Loss and gain come not without cause; it is the ornament of the wise to preserve evenness of mind (under both).