Section | அறத்துப்பால் / Righteousness |
Chapter | இல்லறவியல் / GRHASTHA DHARMA |
இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை
Transliteration
Inmaiyul Inmai Virundoraal Vanmaiyul Vanamai Madavaarpporai
G U Pope Translation
The sorest poverty is bidding guest unfed depart; The mightiest might to bear with men of foolish heart.
Varadarajan Explanation
வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல். வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.
Solomon Pappiah Explanation
வறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது. வலிமையுள் வலிமை அற்றவரின் ஆத்திர மூட்டல்களைப் பொறுத்துக் கொள்வது
Karunanidhi Explanation
வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது
Ellis Explanation
To neglect hospitality is poverty of poverty. To bear with the ignorant is might of might.