Section | பொருட்பால் / VERSES ON ARTHA [MATERIAL WEALTH] |
Chapter | நட்பியல் / SECTION ON FRIENDSHIP |
ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்
Transliteration
Evavunjc Cheygalaan Thaan Therraan Avvuyir Po Om Alavumor Noy
G U Pope Translation
Advised, he heeds not; of himself knows nothing wise; This man’s whole life is all one plague until he dies.
Varadarajan Explanation
தனக்கு நன்மையானவற்றை பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்.
Solomon Pappiah Explanation
அறிவற்றவன் பிறர் சொன்னாலும் செய்யமாட்டான். தானாகவும் அறியமாட்டான். அவனது உயிர் போகும் வரைக்கும் இப்பூமிக்கு அவன் ஒரு நோயே.
Karunanidhi Explanation
சொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத நோயாகும்
Ellis Explanation
The fool will not perform (his duties) even when advised nor ascertain them himself; such a soul is a burden (to the earth) till it departs (from the body).