Section | பொருட்பால் / VERSES ON ARTHA [MATERIAL WEALTH] |
Chapter | நட்பியல் / SECTION ON FRIENDSHIP |
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு
Transliteration
Etpaga Vanna Chirrumaiththe Aayinum Utpagai Ullathaang Kedu
G U Pope Translation
Though slight as shred of ‘seasame’ seed it be, Destruction lurks in hidden enmity.
Varadarajan Explanation
எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளதாகும்.
Solomon Pappiah Explanation
எள்ளின் பிளவு போல உட்பகை சிறியதாக இருக்கலாம். என்றாலம் உட்பகை உள்ள கட்சிக்குள்ளேயே அதன் கேடும் இருக்கிறதாம்.
Karunanidhi Explanation
எள்ளின் பிளவுபோன்று சிறிதாக இருந்தாலும் உட்பகையால் பெருங்கேடு விளையும்
Ellis Explanation
Although internal hatred be as small as the fragment of the sesamum (seed), still does destruction dwell in it.