Section | பொருட்பால் / VERSES ON ARTHA [MATERIAL WEALTH] |
Chapter | அமைச்சியல் / QUALITIES TO BE MAINTAINED BY A MINISTER |
எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று
Transliteration
Erren Rriranguva Cheyyarka Cheyvaanel Marranna Cheyamai Nanrru
G U Pope Translation
Do nought that soul repenting must deplore, If thou hast sinned, ’tis well if thou dost sin no more.
Varadarajan Explanation
பிறகு நினைத்து வருந்துவதற்குக் காரணமானச் செயல்களைச் செய்யக் கூடாது, ஒரு கால் தவறிச் செய்தாலும் மீண்டும் அத் தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.
Solomon Pappiah Explanation
என்ன இப்படிச் செய்து விட்டோமே என்று வருந்தும் படியான செயல்களைச் செய்யாது விடுக. ஒருவேளை தவறாகச் செய்துவிட்டால், திரும்பவும் அதைச் செய்யாது இருப்பது நல்லது.
Karunanidhi Explanation
`என்ன தவறு செய்துவிட்டோம்’ என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது ஒருகால் அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்று
Ellis Explanation
Let a minister never do acts of which he would have to grieve saying, “what is this I have done”; (but) should he do (them), it were good that he grieved not.