Section | அறத்துப்பால் / Righteousness |
Chapter | இல்லறவியல் / GRHASTHA DHARMA |
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென் றடும்
Transliteration
Ennapagai Yurraarum Uyvar Vinaippagai Veeyaathu Pinsenru Adum
G U Pope Translation
From every enmity incurred there is to ‘scape, a way; The wrath of evil deeds will dog men’s steps, and slay.
Varadarajan Explanation
எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.
Solomon Pappiah Explanation
எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர். ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும்.
Karunanidhi Explanation
ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும். ஆனால், அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும்
Ellis Explanation
However great be the enmity men have incurred they may still live. The enmity of sin will incessantly pursue and kill.