Section | பொருட்பால் / VERSES ON ARTHA [MATERIAL WEALTH] |
Chapter | படையியல் / SECTION ON ARMY |
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்னின்று கல்நின் றவர்
Transliteration
Ennaimun Nillalmin Thevvir Palarennai Munninrru Kalnin Rravar
G U Pope Translation
Ye foes! stand not before my lord! for many a one Who did my lord withstand, now stands in stone!
Varadarajan Explanation
பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள், என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நின்று கல்வடிவாய் நின்றவர் பலர்.
Solomon Pappiah Explanation
பகைவர்கேள! என் அரசின் முன்னே போரிட நிற்காதீர். உங்களைப் போலவே இதற்கு முன்பு பலர் நின்றனர். எல்லாம் மறைந்து இப்போது நடுகல்லில் சிலையாக நிற்கின்றனர்.
Karunanidhi Explanation
போர்களத்து வீரன் ஒருவன், “பகைவயர்களே என் தலைவனை எதிர்த்து நிற்காதீர். அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர்” என முழங்குகிறான்
Ellis Explanation
O my foes, stand not before my leader; (for) many are those who did so but afterwards stood (in the shape of) statues.