Section | பொருட்பால் / VERSES ON ARTHA [MATERIAL WEALTH] |
Chapter | நட்பியல் / SECTION ON FRIENDSHIP |
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி
Transliteration
Eenrraal Mugattheyum Innaathaal Enmarr Rruch Chaanrror Mugatthu Kali
G U Pope Translation
The drunkard’s joy is sorrow to his mother’s eyes; What must it be in presence of the truly wise?
Varadarajan Explanation
பெற்றதாயின் முகத்திலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும், அப்படியானால் குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது எண்ணவாகும்.
Solomon Pappiah Explanation
போதைப் பொருளைப் பயன்படுத்துவது தாய் முன்பே கொடுமை. நிலைமை இப்படி இருக்கச் சான்றோர் முன்பு எப்படி மகிழ்ச்சியாகும்?
Karunanidhi Explanation
கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்
Ellis Explanation
Intoxication is painful even in the presence of (one’s) mother; what will it not then be in that of the wise ?