Section | பொருட்பால் / VERSES ON ARTHA [MATERIAL WEALTH] |
Chapter | நட்பியல் / SECTION ON FRIENDSHIP |
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்
Transliteration
Cholvanakkam Onnaarkan Kollarrka Vilvanakkam Theengu Kurritthamai Yaan
G U Pope Translation
To pliant speech from hostile lips give thou no ear; ‘Tis pliant bow that show the deadly peril near!
Varadarajan Explanation
வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும் தீங்கு செய்தலைக்குறித்தமையால், பகைவரிடத்திலும் அவருடைய சொல்லின் வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக் கூடாது.
Solomon Pappiah Explanation
வில் வளைவது தீமை செய்யவே, பகைவர் வணங்கிப் பேசும் சொற்களும் அத்தன்மையவே. அதனால் அவர்தம் சொற்களை ஏற்றுக் கொள்ள வேண்டா.
Karunanidhi Explanation
பகைவரிடம் காணப்படும் சொல் வணக்கம் என்பது வில்லின் வணக்கத்தைப் போல் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதால், அதனை நம்பக் கூடாது
Ellis Explanation
Since the bending of the bow bespeaks evil, one should not accept (as good) the humiliating speeches of one’s foes.