Section | அறத்துப்பால் / Righteousness |
Chapter | பாயிரவியல் / PREFACE |
சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு
Transliteration
Chiirappu Eenum Selvamum Eenum Arattinoo Ungu Aakkam Evano Uyirkku
G U Pope Translation
It yields distinction, yields prosperity; what gain
Greater than virtue can a living man obtain?
Varadarajan Explanation
அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?
Solomon Pappiah Explanation
அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும். நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா?
Karunanidhi Explanation
சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?
Ellis Explanation
Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess ?