Section | அறத்துப்பால் / Righteousness |
Chapter | பாயிரவியல் / PREFACE |
அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு
Transliteration
Aratthinoo Ungu Aakkkamum Illai Athanai Maratthalil Oongillai Kedu
G U Pope Translation
No greater gain than virtue aught can cause;
No greater loss than life oblivious of her laws.
Varadarajan Explanation
ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.
Solomon Pappiah Explanation
அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை
Karunanidhi Explanation
நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை. அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை
Ellis Explanation
There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater sourceof evil than the forgetfulness of it