Section | அறத்துப்பால் / Righteousness |
Chapter | இல்லறவியல் / GRHASTHA DHARMA |
அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
Transliteration
Anbin Vazhiya Thuyirnilai Aஃthilaarkku Enbuthol Porttha Udambu
G U Pope Translation
Bodies of loveless men are bony framework clad with skin; Then is the body seat of life, when love resides within.
Varadarajan Explanation
அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்
Solomon Pappiah Explanation
அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு, அன்பு மட்டும் இல்லை என்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின்மேல் தோலைப் போர்த்தியது போன்றது ஆகும்
Karunanidhi Explanation
அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும். இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்
Ellis Explanation
That body alone which is inspired with love contains a living soul: if void of it, (the body) is boneoverlaid with skin.