Section | அறத்துப்பால் / Righteousness |
Chapter | இல்லறவியல் / GRHASTHA DHARMA |
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்
Transliteration
Adakkam Amararul Uykkum Adangaamai Aarirul Uytthu Vidum
G U Pope Translation
Control of self does man conduct to bliss th’ immortals share; Indulgence leads to deepest night, and leaves him there.
Varadarajan Explanation
அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும். அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.
Solomon Pappiah Explanation
அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும். அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.
Karunanidhi Explanation
அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும் அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்
Ellis Explanation
Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell).