Section | பொருட்பால் / VERSES ON ARTHA [MATERIAL WEALTH] |
Chapter | நட்பியல் / SECTION ON FRIENDSHIP |
ஆயும் அறிவினர் அல்லார்க் கணங்கென்ப
மாய மகளிர் முயக்கு
Transliteration
Aayum Arrivinavar Allaark Kanangkenpa Maaya Magalir Muyakku
G U Pope Translation
As demoness who lures to ruin woman’s treacherous love To men devoid of wisdom’s searching power will prove.
Varadarajan Explanation
வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவற்க்கு அணங்கு தாக்கு(மோகினி மயக்கு) என்று கூறுவர்.
Solomon Pappiah Explanation
வஞ்சிப்பதில் வல்ல பாலியல் தொழிலாளரின் தழுவலை, வஞ்சனையைக் கண்டு அறியும் அறிவற்றவர், காமம் ஊட்டி உயிர் கவரும் தெய்வத்தின் தாக்குதல் என்பர்.
Karunanidhi Explanation
வஞ்சக எண்ணங்கொண்ட பொதுமகள்’ ஒருத்தியிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட மோகினி மயக்கம் என்று கூறுவார்கள்
Ellis Explanation
The wise say that to such as are destitute of discerning sense the embraces of faithless women are (as ruinous as those of) the celestail female.